For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் பரிசுத் தொகை வென்றால் வரி எவ்வளவு தெரியுமா? முழு விவரம்!!

Lucky winners who win lottery or prize money in India also have to pay tax. Let's see what tax rate they have to pay.
04:32 PM Aug 09, 2024 IST | Mari Thangam
இந்தியாவில் பரிசுத் தொகை வென்றால் வரி எவ்வளவு தெரியுமா  முழு விவரம்
Advertisement

வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் இந்தியாவில் வருமான வரி சார்ந்த விதிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தியாவில் வருமானம் ஈட்டும் அனைவரும் வரி செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. லாட்டரி அல்லது பரிசுத் தொகையை வெல்லும் அதிரஷ்டசாலிகளும் வரி செலுத்த வேண்யது கட்டாயம். அவர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

Advertisement

லாட்டரி அல்லது பரிசுத் தொகையை வெல்லும் இந்திய நாட்டை சேர்ந்த நபர் என்றாலும் சரி, வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஆனாலும் சரி நிச்சயம் வரி செலுத்த வேண்டி இருக்கும். இந்த வரியை பரிசுத் தொகையை வழங்குபவர்கள் பிடித்தம் செய்து கொண்ட பிறகு மீதமுள்ள தொகையை வெற்றியாளர்களுக்கு வழங்குவார்கள். அந்த வகையில், 30 சதவீதம் வரியாக பிடித்தம் செய்யப்படும்.

வரி எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?

லாட்டரி, கார்ட் கேம், டிவி நிகழ்ச்சி, குறுக்கெழுத்து புதிர் எனப் பரிசு தொகை வழங்கப்படும் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் இந்திய வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 194B-ல் அடங்கும். பரிசுத் தொகை 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் வரியும் சேர்க்கப்படும். லாட்டரி, ஜாக்பாட், போட்டிகளில் வெல்லும் பரிசுத்தொகை, ரியாலிட்டி ஷோக்களில் கிடைக்கும் பரிசுமணி என எல்லாவற்றுக்கும் 30 சதவீதம் வரிவிதிப்பு செய்யப்பட்டுதான் வென்றவர்களுக்கு மீதி தொகை பரிசாக வழங்கப்படும்.

ஏனெனில், லாட்டரி அல்லது போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகை மீதான நிதி ஆதாயம் ‘Income from Other Sources’ என்பதற்கு கீழ் வருவதுதான் முக்கியக் காரணம். இந்தப் பிரிவில் ஈட்டப்படும் வருமானத்திற்கு/தொகைக்கு வரி செலுத்த வேண்டியது அவசியம். அதை செய்யத் தவறினால் அதற்கான அபராதம் மற்றும் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும். இது தொடர்பாக தகுதியான வல்லுனரிடம் ஆலோசனையும் பெறலாம்.

Read more ; படப்பிடிப்பில் விபத்து..!! சூர்யாவுக்கு தலையில் காயம்..!! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Advertisement