மிகுந்த பணிச்சுமை.. அலுவலக இருக்கையிலே மயங்கி விழுந்து வங்கி ஊழியர் உயிரிழப்பு..!!
அதிக வேலை பளு காரணமாக லக்னௌவில் அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பணிச்சுமை அதிகம் இருப்பதன் காரணமாக ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும், இதனால் ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புணேவில் பட்டயக் கணக்காளர் படித்து முடித்த பெண் பணி அழுத்தம் காரணமாக மரணமடைந்தார். அந்த சம்பவத்தை தொடர்ந்து, சில நாள்களில், லக்னௌவில் அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கடுமையான பணி அழுத்தத்தில் இருந்ததாக, அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
லக்னோவை சேர்ந்த பாத்திமா என்ற பெண், இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியில் கூடுதல் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை, அவர் நாற்காலியிலிருந்து விழுந்து இறந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். உடனடியாக அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவலை தெரிவித்திருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அனைத்து நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். மனித வளத்தை எப்போதுமே இழந்துவிட்டால் சரி செய்யவே முடியாது, இதுபோன்ற திடீர் மரணங்கள், வேலை அழுத்தம் குறித்த கேள்வியை எழுப்புகிறது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Read more ; 81 பணியிடங்கள்.. ரூ.47,610 சம்பளம்..!! Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!