முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"மக்களே குறிச்சி வச்சுக்கோங்க ."! 'கேஸ் சிலிண்டர் முதல் வட்டி விகிதம் வரை.'! பிப்ரவரி 1 முதல் வர இருக்கும் மாற்றங்கள் !

12:35 PM Jan 29, 2024 IST | 1newsnationuser7
Advertisement

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் அரசு பல்வேறு விதமான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் போன்ற தகவல்களும் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படுகிறது. இதேபோல வங்கி போன்ற சேவைகளிலும் அரசு விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் ஒரு மாத தொடக்கத்தில் அப்டேட் செய்யப்படுகிறது. 2024 ஆம் வருட பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருப்பதால் இந்த மாதத்தில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்து காணலாம்.

Advertisement

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை: பிப்ரவரி மாதத்தில் இருந்து வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. தற்போது 1,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை பிப்ரவரி மாதத்தில் 1,898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும் 2024 ஆம் வருட பட்ஜெட் தாக்களுக்கு பிறகு வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் மற்றும் கடைகளில் உபயோகிக்கப்படும் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே அட்டவணைகளில் மாற்றம்: பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரயில்வே கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகளின் ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு ரயில்கள் மற்றும் சில பயணிகள் ரயில்களின் கால் அட்டவணையில் ரயில்வே துறை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய அட்டவணைப்படி ரயில்வே போக்குவரத்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கடன் வட்டி விகிதம் : பிப்ரவரி மாதத்தில் இருந்து வங்கிக் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் ரெப்கோ விகிதம் சமீபத்தில் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றன. 2024 ஆம் வருட பட்ஜெட் தாக்களுக்கு பிறகு ரெப்கோ விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டி விகிதம் விதிக்கப்படும். மேலும் வங்கிக் கடனை திருப்பி செலுத்துவதற்கு அதிக காலம் எடுக்கும்.

பான் கார்டு: ஆதார் கார்டு போலவே பான் கார்டு விநியோகிப்பதிலும் புதிய கட்டுப்பாடுகளையும் மாற்றங்களையும் கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. தற்போது பான் கார்டுகள் தனியார் நிறுவனங்கள் முதல் சிறிய சேவை மையங்களிலும் விண்ணப்பித்து பெறக்கூடிய வகையில் அதன் விதிமுறைகள் இருக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகு இதில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. ஆதார் கார்டு போலவே பான் கார்டு எடுப்பதற்கும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். மேலும் தனியார் நிறுவனங்களிடம் இருக்கும் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஃபாஸ்ட் டேக் சேவையில் வர இருக்கும் மாற்றங்கள்: ஜனவரி 31 முதல் கே.ஒய்.சி முழுமையடையாத ஃபாஸ்ட் டேக் சேவைகளை ரத்து செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்து இருக்கிறது. மேலும் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் மட்டுமே செல்லுபடியாகும் என்ற வகையில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் ஒரு வாகனத்திற்கு எடுக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் மற்ற வாகனங்களுக்கு செல்லுபடியாக அது எனவும் நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

Tags :
BANKBudget 2024central govtlpgPan Card Rules
Advertisement
Next Article