For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒடிசா- சத்தீஸ்கர் மாநிலம் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...! 26-ம் தேதி வரை கனமழை...!

Low pressure area near Odisha- Chhattisgarh state
08:21 AM Jul 21, 2024 IST | Vignesh
ஒடிசா  சத்தீஸ்கர் மாநிலம் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி     26 ம் தேதி வரை கனமழை
Advertisement

இன்று முதல் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஒடிசா சில்கா ஏரி அருகில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா- சத்தீஸ்கர் மாநிலம் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் இன்று முதல் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement