முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்...! மத்திய அரசு புதிய ஒப்பந்தம் கையெழுத்து...!

09:26 AM Feb 10, 2024 IST | 1newsnationuser2
Advertisement

விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதற்கு வசதியாக, சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், பஞ்சாப் & சிந்து வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 05.02.2024 அன்று பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைமை அலுவலகத்தில், சேமிப்புக் கிடங்கு ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்வரூப் குமார் சாஹா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

Advertisement

பஞ்சாப் & சிந்து வங்கி மின்னணு மாற்றத்தக்க சேமிப்புகிடங்கு ரசீதுகளுக்கு ஈடாக எந்தவித அடமானமும் இல்லாமல், கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் கடன்களை வழங்குகிறது. வேளாண் துறையில் ரூ.75 லட்சம் வரையிலும், இதர பிரிவினருக்கு ரூ.5 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

மின்னணு மாற்றத்தக்க சேமிப்புகிடங்கு ரசீதுகளுக்கு எதிராக நிதி திரட்டுவதற்கான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் வேளாண் பிணைய நிதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர, வைப்புத் தொகையாளர்களுக்கு நன்மைகள் குறித்த தகவல்களை வழங்குவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags :
farmersLOAN
Advertisement
Next Article