ஒரே வீட்டில் தங்கிய காதலர்கள், மூன்றாவது மாடியில் செய்த காரியம்..
ஆந்திர மாநிலத்தில் உள்ள அமலாபுரத்தில், 28 வயதான பில்லி துர்கா ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். கேட்டரிங் வேலை செய்து வரும் இவர் 23 வயதான சுஷ்மிதா என்பவரை காதலித்து வந்துள்ளார். சுஷ்மிதா, ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை ஸெஇதுஹ் வருகிறார். இந்நிலையில், காதலர்கள் இருவரும், திருமணம் செய்யாமல், விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், வீட்டில் இருந்த டிவி ரிமோட், டீ குடிக்கும் கப், கண்ணாடி பொருட்கள் ஆகியவற்றை உடைத்துள்ளனர். மேலும், நேற்று முன்தினம் அதிகாலையில் காதலர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது கொலையா அல்லது தற்கொலையா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Read more: நைட் ஷிப்ட் பார்ப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான snacks இது தான்..