முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காதலர்களே உஷார்!… அத்துமீறும் ஜோடிகளை கண்காணிக்க உத்தரவு!… மெரினாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

08:36 AM Feb 13, 2024 IST | 1newsnationuser3
Advertisement

சென்னையில், காதலர்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரையில் அத்துமீறுவோரை கண்காணிக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

காதலர் தினம், நாளை பிப்.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில், காதலர்கள் அதிகம் கூடுவர். குறிப்பாக, மெரினா கடற்கரையில் காதலர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். இந்நிலையில், மெரினாவில் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதுமட்டுமின்றி, காதலர் தினம் ஒரு கலாசார சீர்கேடு எனக் கூறும் சிலர், காதல் ஜோடிகளை மிரட்டவும் செய்கின்றனர்.

யாராவது இதுபோல் மிரட்டினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பள்ளி மாணவர்களில், 16 வயதுடைய காதல் ஜோடிகளை கண்காணித்து, அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில், பெண் போலீசாரை அதிகமாக ஈடுபடுத்தவும் உள்ளனர்.

Tags :
அத்துமீறுபவர்களை கண்காணிக்க உத்தரவுகாதலர் தினம்மெரினாவில் கூடுதல் பாதுகாப்பு
Advertisement
Next Article