For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”அன்பும் அறனும்”..!! பிக்பாஸ் விக்ரமனுக்கு டும் டும் டும்..!! பெண் யார் தெரியுமா..? ரசிகர்கள் வாழ்த்து..!!

Vikraman is getting married today. Vikraman shared his wedding photos on his Instagram page.
10:39 AM Nov 05, 2024 IST | Chella
”அன்பும் அறனும்”     பிக்பாஸ் விக்ரமனுக்கு டும் டும் டும்     பெண் யார் தெரியுமா    ரசிகர்கள் வாழ்த்து
Advertisement

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 மூலம் பெரியளவில் பிரபலமான விக்ரமன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகமான சர்ச்சைகளில் சிக்கினார். அவர் ஒரு பெண்ணை ஏமாற்றி அவரிடம் இருந்து பண மோசடி செய்ததாக அந்த பெண் விக்ரமன் மீது வழக்கு தொடர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை தொகுப்பாளராக பலரையும் பேட்டி எடுத்த விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் "அறம் வெல்லும்" என்ற டேக் மூலம் ட்ரெண்ட் ஆனார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு அதிகமான சப்போர்ட் இருந்தது. அதே நேரத்தில் இவர் விசிக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் கட்சி தலைவர் உட்பட இவருக்கு விசிக கட்சி உறுப்பினர்களின் சப்போர்ட் அதிகமாக இருந்தது. அதுபோல அசீம் உடைய நடவடிக்கைக்கு பலர் சப்போர்ட் கொடுத்து வந்தனர். அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் யார் டைட்டில் வெற்றி பெற போவது என்ற போட்டியும் இருந்தது. அசீம் பிஆர் மூலமாகத்தான் ஒவ்வொரு வாரமும் அதிக ஓட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்ற குற்றசாட்டுகள் இருந்தாலும் கடைசியில் அவர்தான் வெற்றி பெற்றார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கூட விக்ரமன் பல பேட்டிகளில் அசீம் வெற்றி பெற்றது முறையானது அல்ல என்று கூறிக் கொண்டிருந்தார். அதற்கு விக்ரமனை அசீமுடைய ரசிகர்கள் திட்டி வந்தனர். சமீபத்தில் அவர் மீது பெண் வழக்கு தொடர்ந்த பிறகு அவர் பெரிய அளவில் சமூக வலைதளத்தில் பேட்டிகளும் கொடுக்காமல் இருந்தார். ஆனால், பிக்பாஸ் 8-வது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மட்டும் பேசியிருந்தார்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த செய்திகளும் வெளியே தெரியாத வகையில் தான் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர் சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உள்ளிருந்த போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வேண்டுகோள் வைத்திருந்தனர். நான் திருமணம் செய்யப்போவதில்லை என்று கூறிக் கொண்டிருந்த நிலையில், இன்று விக்ரமனுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. தன்னுடைய திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமன் பகிர்ந்துள்ளார். அதில் "அன்பும் அறனும்" என்று போஸ்ட் போட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Read More : HDFC வங்கி வாடிக்கையாளரா நீங்கள்..? ஆன்லைனில் பணம் அனுப்ப முடியாது..!! வெளியான அறிவிப்பு..!!

Tags :
Advertisement