வந்தே பாரத் ரயிலில் லக்கேஜ் தொலைந்துவிட்டதா?. இழப்பீடு பெறுவது எப்படி?.
Vande Bharat train: இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் அமைப்பாகும். ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு இந்திய ரயில்வே பல விதிகளை வகுத்துள்ளது. ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். பயணிகளை கண்காணிக்கவும் பல விதிகள் உள்ளன.
இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். நீங்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் எங்காவது செல்கிறீர்கள் என்றால், உங்கள் உடைமைகள் ரயிலில் எதிர்பாராதவிதமாக தொலைந்து போகும். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு இந்திய ரயில்வே மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த இழப்பீடு எவ்வாறு கொடுக்கப்படுகிறது, அதன் செயல்முறை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
நீங்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் பொருட்கள் திருடப்பட்டுவிட்டால் அல்லது எங்காவது தொலைந்து விட்டால் முதலில் நீங்கள் இதைப் பற்றிய தகவல்களை உதவியாளர், காவலர் அல்லது ஜிஆர்பி எஸ்கார்ட்டிடம் கொடுக்க வேண்டும். உங்களுடைய உடைமைகள் என்னென்ன திருடப்பட்டது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்.
உங்கள் லக்கேஜ் எந்த ரயில் நிலையத்தில் திருடப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டும். உங்கள் லக்கேஜ்கள் திருடப்பட்ட நிலையத்திற்கு ரயில்வே துறை இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம். ஆனால் உங்கள் தொலைந்த பொருள் கிடைக்கவில்லை என்றால், அப்போது ரயில்வே மூலம் இழப்பீடு வழங்கப்படும்.
உங்கள் தொலைந்த லக்கேஜ் ரயிலில் கிடைக்காதபோது, உங்கள் லக்கேஜின் விலையை ரயில்வே கணக்கிட்டு அதன் அடிப்படையில் ரயில்வே இழப்பீடு வழங்குகிறது. பொதுவாக ரயில்வே ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. லக்கேஜ் கட்டணம் செலுத்தி லக்கேஜ்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே, லக்கேஜ் இழப்புக்கான இழப்பீட்டை ரயில்வேயிலிருந்து பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: காலத்தை வென்ற கனவு நாயகன் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று!. உலக மாணவர் தினமாக கொண்டாடுவது ஏன்?