For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புத்தாண்டில் புதுவீடு வாங்கவேண்டுமா?… பொதுத்தேர்தலும்!… விலை சரிவும்!… சொத்து நிபுணர்கள் கூறுவது என்ன?

12:56 PM Dec 15, 2023 IST | 1newsnationuser3
புத்தாண்டில் புதுவீடு வாங்கவேண்டுமா … பொதுத்தேர்தலும் … விலை சரிவும் … சொத்து நிபுணர்கள் கூறுவது என்ன
Advertisement

சர்வதேசப் பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டில் வீடு வாங்குவதற்கான சூழல் அவ்வளவு சிறப்பாக இல்லை. 2022 மே மற்றும் 2023 பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இது வீடு வாங்குவோர் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.

Advertisement

2020ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, பெரும்பாலான நகரங்களில் வீடு விற்பனை அதிகரித்தது. அந்த நேரத்தில் சொத்து விலைகளும் அதிகரித்தன. கடந்த சில மாதங்களாக வட்டி விகிதங்கள் ஒரே அளவில் இருப்பதால் சொத்துகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் விலை அதிகமாக இருந்தாலும் விற்பனை நன்றாகவே இருந்தது.

வட்டி விகிதக் குறைப்பு, வாங்கக் கூடிய அளவில் சொத்து விலை, சம்பள உயர்வு மற்றும் நல்ல வேலை வாய்ப்பு போன்ற காரணிகளால் மக்களிடையே வீடு வாங்கும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரம், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயக் கொள்கைக் குழு அறிக்கையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது வீட்டுக் கடன்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறையில் தேவை அதிகரித்தது. வட்டி விகிதங்கள் மற்றும் விலை உயர்வு பற்றிய கவலைகள் இருந்தபோதிலும் வீடு விற்பனை சிறப்பாகவே இருந்தது. இந்த விற்பனை வேகம் அடுத்த ஆண்டும் தொடரும் என நிபுணர்கள் நம்புகின்றனர். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு இடையே வீடுகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் விற்பனையில் சரிவு ஏற்படலாம்.

வீடு விற்பனை அதிகரித்துள்ள நகரங்களில், முதல் 7 நகரங்களில் கொல்கத்தா மிகவும் மலிவு விலை கொண்ட வீட்டுச் சந்தையாக உள்ளது. இதற்குப் பிறகு ஹைதராபாத், புனே மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் உள்ளன. கொரோனா பாதிப்புக்குப் பிறகு ஹைதராபாத்தில் அதிக விலை உயர்வு காணப்பட்டது. மும்பை மற்றும் குருகிராம் ஆகியவை தற்போது மிகவும் விலையுயர்ந்த சொத்து சந்தைகளாக உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வீடுகளின் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளதால், வீடு கட்டுபவர்களும் விலையை உயர்த்தி வருகின்றனர். குருகிராம், மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற சில சந்தைகளில் விலை வேகமாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த நகரங்களில் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நகரங்களில் வீட்டு மனை உயர்வு என்பது, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை எந்த விகிதத்தில் உயரும் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சொத்து நிபுணர்கள் நம்புகின்றனர். பெரும்பாலான டெவலப்பர்கள் விலையை உயர்த்தினாலும் அது வாங்குபவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement