நீண்ட நாள் மலச்சிக்கலா.? உஷார்.! இதய நோய் அபாயமாக இருக்கலாம்.! மருத்துவர்களின் ஷாக்கிங் எச்சரிக்கை.!
நமது உடல் அமைப்பின்படி உடலில் செயல்படும் ஒவ்வொரு உறுப்புகளும் மற்ற உறுப்புக்களுடன் தொடர்பு இருக்கிறது. ஒரு உறுப்பில் ஏற்படும் தாக்கம் அல்லது பாதிப்பு மற்றொரு உறுப்பின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடியதாக அமையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நாள் பட்ட மலச்சிக்கல் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இது ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி அளிக்கின்றனர்.
நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் இதய நோய் ஆகியவற்றிற்கிடையே சிக்கலான தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மலச்சிக்கலின் காரணமாக நமது உடலில் குவிக்கப்படும் நச்சுக்கள் இதயத்தில் வீக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் நாள்பட்ட மலச்சிக்களால் ஏற்படும் அழற்சி ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். இவற்றோடு அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வது மற்றும் அதிக உடல் உழைப்பு இல்லாமலிருப்பது ஆகியவையும் இதய நோய்க்கு காரணமாக அமையும் என தெரிவிக்கின்றனர்.
இதய நோய்களுக்கும் மலச்சிக்கலுக்கும் உண்டான தொடர்பு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது என டாக்டர் ராவ் என்பவர் தெரிவித்திருக்கிறார் மலச்சிக்கலின் அபாயம் வயதிற்கு ஏற்ப அதிகரிப்பதைப் போலவே இதய நோயின் அபாயமும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். குடலின் இயக்கம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்ப்பதோடு இதய நோய் சம்பந்தமான பாதிப்புகளையும் தவிர்க்க இயலும் என தெரிவித்துள்ளார். உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். இதன் மூலம் இதை ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.