”களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க”..!! வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என்று கடந்த 1967ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு தினமாக அரசு கொண்டாடி வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில், முன்னாள் முதலமைச்சர் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்ற விழாவில் பேசிய காணொலியை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ பதிவில், ”தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம் என்பதை விட இந்த பெயரை பெற்றிருப்பது என்று தான் சொல்ல வேண்டும். மாற்றப்பட்ட பெயரை நாம் திரும்ப பெற்றிருக்கிறோம். இந்த அரசு வந்தபிறகு தான் இந்த பெயர் பெறப்பட வேண்டும் என்று வரலாற்றில் இருந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன்' இவ்வாறு அண்ணா தெரிவித்திருப்பார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ”கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது”..!! சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்த ஆர்.பி.உதயகுமார்..!!