"அமைச்சர் எல்.முருகன் தகுதியற்றவர்.."; "எஸ்.சி சமூகத்தைச் சார்ந்தவரை அவமதிப்பதா.?.." - டி.ஆர் பாலுவிற்கு அண்ணாமலை பதிலடி.!
திமுக எம்பி, டி.ஆர் பாலு பாராளுமன்ற விவாதத்தின் போது பாஜக அமைச்சர் எல்.முருகனை தகுதியற்றவர் என்று கூறிய நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை.
இது தொடர்பாக தனது 'X' வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அண்ணாமலை எஸ்.சி சமூகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சரை தகுதியற்றவர் என டி.ஆர் பாலு விமர்சித்தது மிகவும் கண்டனத்திற்குரியது என பதிவு செய்துள்ளார். சமூக நீதி காவலரான பிரதமர் மோடி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக நியமித்திருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு பல ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கிறது ஒருமுறை கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியது இல்லை எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் மக்கள் பணியாற்றி வரும் மத்திய அமைச்சரை தகுதியற்றவர் என்று கூறிய டி.ஆர் பாலுவின் செயல் அவரது தலைக்கணத்தை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.