For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha | தேர்தலில் வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை..? வாக்காளர்களே மறந்துறாதீங்க..!!

11:30 AM Apr 05, 2024 IST | Chella
lok sabha   தேர்தலில் வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை    வாக்காளர்களே மறந்துறாதீங்க
Advertisement

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி தேர்தல்களில் வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், இந்திய பாஸ்போர்ட் உட்பட 12 அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

Advertisement

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்கள் :

  1. ஆதார் அட்டை
  2. ஓட்டுநர் உரிமம்
  3. பான்கார்டு
  4. ரேஷன் அட்டை
  5. பாஸ்போர்ட்
  6. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
  7. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அம்டை
  8. எம், எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
  9. அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ்
  10. வங்கி மற்றும் அஞ்சல் பாஸ்புக்
  11. மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை
  12. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

முக்கியமாக, தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப்பை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக கருத முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூத் ஸ்லிப்பில் வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண், வாக்குச்சாவடி விவரம் இடம் பெற்றிருக்கும். தற்போது வாக்காளரின் புகைப்படமும் பூத் ஸ்லீப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை வாக்காளர் அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது.

Read More : BREAKING | அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Advertisement