முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Lok Sabha | ’சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்’..!! ’தனித்துப் போட்டியிட முடிவா’..? செல்வப்பெருந்தகை அதிரடி பேட்டி..!!

02:47 PM Feb 29, 2024 IST | 1newsnationuser6
Advertisement

காங்கிரஸ் எந்த காலத்திலும் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக கூறியுள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் திமுக வேகம் காட்டி வருகிறது. ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேக கட்சிக்கு நாமக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா இரண்டு சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. திமுகவுடன் காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் இருந்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”எங்கள் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கியது. கூட்டணிக் கட்சிகளோடு தோழமையோடு இருக்கிறோம். அத்துடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஆனால், பேச்சுவார்த்தை உடன்படாததால் கடந்த 2014ஆம் ஆண்டில் தனியாக போட்டியிட்டோம். காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. அத்துடன் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம். தனியாக போட்டியிட வேண்டுமா என்பதை எங்கள் கட்சி தலைமைதான் முடிவு செய்யும்.

திமுகவும், காங்கிரசும் உண்மையான தோழமையுடன் இருக்கின்றன. திமுக தலைவரும், ராகுல் காந்தியும் அண்ணன், தம்பி போல பழகி வருகின்றனர். திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருகிறது. திமுகவுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். நல்ல முடிவு எட்டப்படும்" என்றார்.

English Summary : Congress alone in the Lok Sabha elections..?

Read More : TN Police | ஹெல்மெட், சீட் பெல்ட்..!! இனி போலீசார் மீதும் வழக்குப்பதிவு..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

Advertisement
Next Article