For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha | விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு..!! முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

11:09 AM Apr 09, 2024 IST | Chella
lok sabha   விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு     முக்கிய அம்சங்கள் என்னென்ன
Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

Advertisement

விசிக தேர்தல் அறிக்கை

* சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.

* மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.

* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தப்படும்.

* மத்திய அரசின் தமிழ்நாட்டுப் பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமனம்.

* இந்தியாவின் 2-வது தலைநகராக சென்னை அமைக்க வலியுறுத்தப்படும்.

* அமைச்சரவையிலும், மேலவையிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்.

* ஆணவக்கொலை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர குரல் கொடுக்கும்.

* பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வர வலியுறுத்தல்.

* வக்குப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும்.

* தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது என வலியுறுத்தப்படும்.

* அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

* மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தல்.

* பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர விசிக –வின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.

* தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.

* தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பு உறுதி செய்ய குரல் கொடுப்போம்.

* இந்தி திணிப்பை எதிர்ப்பு அனைத்து மொழிகளின் பாதிகாப்பினை காக்க விசிக குரல் கொடுக்கும்.

* தேசிய மனித உழைப்பு நேரம் மற்றும் மதிப்புக்கொள்கை குறித்து வலியுறுத்தப்படும்.

* வறுமைக்கோட்டு உச்ச வரம்பினை உயர்த்த வலியுறுத்தப்படும்.

* ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.

* விவசாய கடன் ரத்து செய்ய குரல் கொடுப்போம்.

* கார்ப்பரேட் மற்றும் தனியார்மயத்தை கைவிட தொடர்ந்து வலியுறுத்தப்படும்

Read More : உடல் எலும்புகள் தெரிய மிக மோசமான நிலையில் நடிகை நிஷா நூர்..!! எய்ட்ஸ் பாதிப்பால் நரகமான வாழ்க்கை..!!

Advertisement