Lok Sabha | ”84 வயதுக்குட்பட்டோர் தபால் வாக்களிக்க முடியாது”..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதனால் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரவர்களின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தபால் ஓட்டு செலுத்தும் முதியோருக்கான வயது வரம்பை உயர்த்தி மத்திய அரசின் சட்ட அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 80 வயதானவர்கள் தபால் மூலம் வாக்களிக்க கடந்த தேர்தலில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் 85 வயது நிரம்பியவர்கள் மட்டுமே தபால் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.