For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha | புதுச்சேரி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்..?

08:54 AM Mar 05, 2024 IST | 1newsnationuser6
lok sabha   புதுச்சேரி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்
Advertisement

மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிடவுள்ள நிலையில், வேட்பாளரை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் செல்வகணபதி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தெரிவித்த 3 வேட்பாளர்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயர் முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியலில் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் போட்டியிட தயக்கம் காட்டுவதால் புதுச்சேரி தொகுதியில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More : Abortion | ’கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை உள்ளது’..!! அதிரடியாக நிறைவேறிய சட்ட மசோதா..!!

Advertisement