Lok Sabha | 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்..? தேர்தல் ஆணைய வட்டாரங்கள் பரபரப்பு தகவல்..!!
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 14 அல்லது 15ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனவும், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், அதற்குள் புதிய அரசை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இதனால், வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் தேதி மார்ச் மாதம் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியாகின. எனவே, 2024 தேர்தல் தேதியும் இதை ஒட்டியே வெளியாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது. அதன்படி, தேர்தலுக்கான தேதி மார்ச் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 14 அல்லது 15ஆம் தேதிகளில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டைப் போலவே இம்முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் எனவும், முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : Lok Sabha | கேரளா, தெலங்கானா, கர்நாடகாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி..!! திருமாவளவன் அறிவிப்பு..!!