For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha | திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி..? முழு விவரம் உள்ளே..!!

02:35 PM Mar 12, 2024 IST | 1newsnationuser6
lok sabha   திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி    முழு விவரம் உள்ளே
Advertisement

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவைகள் உள்ளன. திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.

Advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில், இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மக்கள் நீதி மய்யத்திற்கு மட்டும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சிகளில் விசிக, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டி..?

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - நாமக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - நாகை, திருப்பூர்

மார்க்சிஸ்ட் கட்சி - மதுரை, திண்டுக்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி - சிதம்பரம், விழுப்புரம்

திமுக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் தொகுதிகள் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

Read More : Edappadi Palaniswami | ’போதைப் பொருள் விற்பனை மையமாக மாறிய தமிழ்நாடு’..!! விளாசிய எடப்பாடி..!!

Advertisement