முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Tasmac | மக்களவை தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்..!!

10:33 AM Mar 19, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் தரப்பில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

மக்களவை தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளிலும், மது விற்பனையிலும் முறைகேட்டை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, டாஸ்மாக் கடைகளுக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ”மதுக்கடைகளில் 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு இருக்கக் கூடாது. மதுக்கடையின் சராசரி விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 30 சதவீதத்திற்கு அதிகம் இருக்கக்கூடாது.

மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது. தினமும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு ஆய்வு செய்யப்படும். மதுக்கடைகளில் உள்ள 21 பதிவேடுகளும் தினசரி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இருப்பு பதிவேடு கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். மதுக்கடைகளும், அதில் உள்ள மதுக்கூடங்களும் அரசு அனுமதித்த நேரமான மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டும் இயங்க வேண்டும். மதுக்கூடங்களில் மதுபானம் இருப்பது கண்டறியப்பட்டால், மதுக்கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்கப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். பிஓஎஸ் எனப்படும், விற்பனை முனைய கருவியில் விற்பதை அதிகப்படுத்த வேண்டும். மதுக்கடைகளில், டோக்கன் மற்றும் கூப்பன்களுக்கு கண்டிப்பாக விற்கக்கூடாது. அனுமதியற்ற மதுக்கூடம் செயல்பட்டால் கடை மேற்பார்வையாளர் உடனே மது விலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார், மாவட்ட மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும். கடை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும். காலாவதியான மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருத்தல் கூடாது" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : ”காசு வாங்கிட்டு பேசுற”..!! ”நீ என்ன புரோக்கரா”..? சவுக்கு சங்கரை வறுத்தெடுத்த தயாரிப்பாளர் ராஜன்..!!

Advertisement
Next Article