For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தலோடு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல்..? சத்யபிரதா சாஹூ சொன்ன முக்கிய தகவல்..!!

01:21 PM Apr 08, 2024 IST | Chella
மக்களவை தேர்தலோடு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல்    சத்யபிரதா சாஹூ சொன்ன முக்கிய தகவல்
Advertisement

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்த புகழேந்தி, காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம் தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பான தகவல் தேர்தல் ஆணையத்திற்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த 6 மாத காலத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.

Advertisement

இந்நிலையில், மக்களவைத் தேர்தலோடு விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், குறைவான நாட்களே இருப்பதால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அதே நாளில் நடத்த சாத்தியமில்லை.

ஆனால், ஜூன் 1ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் அடுத்து 6 கட்டங்களுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்பதால் அதில் ஒரு கட்டத்தோடு விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் 2016ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு ராதாமணி வெற்றி பெற்றார். எனினும், புற்றுநோய் பாதிப்பால் 2019ஆம் ஆண்டு ராதாமணி உயிரிழந்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி தோல்வியைத் தழுவினார். அதற்குப் பிறகு வந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு சென்றார். இந்நிலையில் புகழேந்தி மறைவால் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கிறது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி.

Read More : தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை என்ன..? பிரசாந்த் கிஷோர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!! அப்படினா திமுக, அதிமுக..?

Advertisement