For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024: 12.55% சதவீதம் வாக்குகள் பதிவு…!

09:45 AM Apr 19, 2024 IST | Kathir
மக்களவைத் தேர்தல் 2024  12 55  சதவீதம் வாக்குகள் பதிவு…
Advertisement

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Advertisement

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467. மேலும் முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கு 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 9 மணி நிலவரப்படி வடசென்னையில் - 9.73 சதவீதமும், மத்திய சென்னையில் - 8.59 சதவீதமும், தென் சென்னையில் - 10.08 சதவீதமும், கன்னியாகுமரியில் - 11.52 சதவீதமும், திருவள்ளூர் (தனி) - 12.53 சதவீதமும் பதிவாகியுள்ளன.

Advertisement