Lok Sabha election Results 2024: 3,495 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் பின்னடைவு..!
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது. இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடந்தது.
இதனையடுத்து பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளை பொறுத்தவரை பாஜகவே முன்னணியில் இருந்தது. இது இண்டியா கூட்டணிக்கு ஆரம்பகட்ட சறுக்கலாக அமைந்தது. இந்நிலயில் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களிலும், இண்டியா கூட்டணி 230 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 19 இடத்தில் முன்னிலை வகித்து வருகின்றன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 1 தொகுதியிலும் அதிமுக கூட்டணி- 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. விருதுநகரில் அதிமுக கூட்டணியான தேமுதிக-வின் வேட்பாளர் விஜய பிரபாகரன் கடந்த நான்கு சுற்றுகளாக முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்து உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 19,821 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3,495 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து உள்ளார்.