For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha Election | ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு..? மே 22இல் வாக்கு எண்ணிக்கை..? இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்..!!

02:56 PM Feb 24, 2024 IST | 1newsnationuser6
lok sabha election   ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு    மே 22இல் வாக்கு எண்ணிக்கை    இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்
Advertisement

லோக்சபா தேர்தல் குறித்து பரவிய தகவல்கள் வதந்தி என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

Lok Sabha Election | 17-வது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணும் நாள், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் போன்றவை பற்றிய அறிவிப்பு மார்ச் 12ஆம் தேதி வெளியாகும், ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்றும் மே 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் வெளியான தகவல் போலியானது. இதுவரை தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் பத்திரிகைகளை அழைத்து தேதி அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எக்ஸ் சமூகவலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட மற்றுமொரு அறிக்கையில், ”3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தேர்தல் விதிகளின்படி ஆணைய இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்திற்கு வெளியே மாற்றப்பட்ட அதிகாரிகள் தொகுதிக்குள் பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று மாநில அரசுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

English Summary : Lok Sabha Election To Be Held On April 19, Counting On May 22? Election Commission Clarifies

Read More : பிரதமர் வருவதற்கு முன்பே BJP-இல் இணைந்த விஜயதரணி..!! அவசரம் காட்டுவது ஏன்..? பரபர பின்னணி..!!

Advertisement