For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தல் 5PM நிலவரம்: தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு ..! தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி டாப்..!

05:42 PM Apr 19, 2024 IST | Kathir
மக்களவைத் தேர்தல் 5pm நிலவரம்  தமிழகத்தில் 63 20  வாக்குப்பதிவு     தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி டாப்
Advertisement

தமிழகத்தில் மாலை 5மணி நிலவரப்படி 63.20% வாக்குப்பதிவு.

Advertisement

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467. மேலும் முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கு 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில், 67.52 சதவிகிதமும், அதற்கு அடுத்தபடியாக 67.37 சதவிகிதமும் பதிவாகியுள்ளது. கடைசி மூன்று இடங்களை சென்னையின் மூன்று தொகுதிகள் பிடித்துள்ளது.

  1. தர்மபுரி 67.52
  2. நாமக்கல் 67.37
  3. ஆரணி 67.34
  4. கள்ளக்குறிச்சி 67.23
  5. கரூர் 66.91
  6. சிதம்பரம் 66.64
  7. பெரம்பலூர் 66.56
  8. திருவண்ணாமலை 65.91
  9. சேலம் 65.86
  10. அரக்கோணம் 65.61
  11. வேலூர் 65.12
  12. விழுப்புரம் 64.83
  13. கிருஷ்ணகிரி 64.65
  14. ஈரோடு 64.50
  15. திண்டுக்கல் 64.34
  16. நாகப்பட்டினம் 64.21
  17. கடலூர் 64.10
  18. நீலகிரி 63.88
  19. விருதுநகர் 63.85
  20. மயிலாடுதுறை 63.77
  21. பொள்ளாச்சி 63.53
  22. தேனி 63.41
  23. தென்காசி 63.10
  24. தூத்துக்குடி 63.03
  25. ராமநாதபுரம் 63.02
  26. தஞ்சாவூர் 63.00
  27. கன்னியாகுமரி 62.82
  28. சிவகங்கா 62.50
  29. திருச்சிராப்பள்ளி 62.30
  30. காஞ்சிபுரம் 61.74
  31. திருவள்ளூர் 61.59
  32. கோவை 61.45
  33. திருப்பூர் 61.43
  34. திருநெல்வேல் 61.29
  35. மதுரை 60.00
  36. ஸ்ரீபெரும்புதூர் 59.82
  37. வடசென்னை 59.16
  38. மத்திய சென்னை 57.25
  39. தேன்சேன்னை 57.04
Tags :
Advertisement