முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடங்கியது 4ஆம் கட்ட வாக்குப் பதிவு..! பலத்தை நிரூபிக்குமா பாஜக!! களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்..!

07:16 AM May 13, 2024 IST | Baskar
Advertisement

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து நான்கு கட்ட தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது.

ஏற்கெனவே ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதோடு சேர்த்து ஆந்திராவுக்கான சட்டமன்ற தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது. மேலும் ஒடிசாவில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை பொருத்தவரை ஆந்திராவில் 25 தொகுதிகளும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளும், பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் நான்கு தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் எட்டு தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகள் நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

நட்சத்திர வேட்பாளர்கள்: மேற்குவங்க மாநிலத்தில் 42 தொகுதிகளில் 10 தொகுதிகளில் இதுவரை தேர்தல் நடைபெற்றிருக்கிறது. மேலும் இன்று எட்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்று ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு டைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கின்றனர். தேர்தலை ஒட்டி மேற்கண்ட 10 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது துணை ராணுவத்தினருடன் உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகின்றனர் தேர்தல் ஆணையமும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Read More: AstraZeneca | தவறான தகவல்களால் சிதைக்கப்பட்ட கோவிட்-19 உயிர்காப்பான்.!!

Advertisement
Next Article