Lok Sabha Election 2024: தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி: தேர்தல் ஆணையம்..!
Lok Sabha Election 2024: இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட தேர்தல் மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும் நடைபெற்றது.
18வது மக்களவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு உத்திர பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று( ஜூன் 1ஆம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் நிறைவுபெற்ற நிலையில் தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது. வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.