மக்களவை தேர்தல் 2024!… ஜூன் 1வரை அதிரடி தடை!… தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Lok Sabha Election: மக்களவை தேர்தலையொட்டி வரும் ஜூன் 1ம் தேதி மாலை 6.30 மணிவரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நிறைவடைகிறது. அந்தவகையில் 3ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2024 மக்களவை தேர்தல்களுக்கான வெளியேறும் கருத்துக்கணிப்பு மீதான தடை குறித்த விவரங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ஏற்கனவே அறிவித்தப்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதைப்போல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: தீக்காயங்களை குணப்படுத்தும் புதிய வைட்டமின் சி நிறைந்த பேண்டேஜ்!… ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!