For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha | விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்கும் பாஜக..? பிளான் போட்ட அண்ணாமலை..!!

11:41 AM Mar 22, 2024 IST | 1newsnationuser6
lok sabha   விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்கும் பாஜக    பிளான் போட்ட அண்ணாமலை
Advertisement

மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜகவில் போட்டியிட மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கனின் அண்ணன் ஜவஹர், பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், டெல்லியில் பணியாற்றி வரும் டாக்டர் வேதா தாமோதரன் ஆகியோர் பெயர் தொடக்கத்தில் அடிபட்டது. கடும் போட்டி நிலவிவந்த நிலையில் போராசிரியர் ராம சீனிவாசன் திருச்சி தொகுதியில் களம் இறங்க உள்ளார்.

ஆனாலும், விருதுநகர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிடுவதா அல்லது கூட்டணிக்கு ஒதுக்குவதா என்ற குழப்பமான சூழ்நிலையும் நிலவி வந்தது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தமைக்காக ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சரத்குமார், கடந்த 12ம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து, வலிமையான ஆட்சி, வலிமையான அரசு அமைய இணைந்து பயணிப்போம், பாடுபடுவோம் என்று கூறி இளைஞர்களின் வருங்கால நலனுக்காகவும் நன்மைக்காவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமாரை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த ராதிகா, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடத்து வருகிறார். ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் பெறுப்பு வகித்து வருகிறார். இதன் மூலம் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார்.

ஓரிரு நாட்களில் பாஜக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும், அதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் களம் இறக்கப்படுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More : தேர்தல் வாக்குப்பதிவின்போது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Advertisement