Lok Sabha | மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்..? தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!!
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இம்முறை கட்சியின் பழைய சின்னமான பம்பரத்தில் போட்டியிட வேண்டும் என்று மதிமுக முடிவெடுத்துள்ளது.
இதற்கு திமுக சம்மதித்துள்ள நிலையில், தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியதைப் போல, வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜி.அருள்முருகன் அமர்வு இந்த வழக்கில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Read More : TVK Vijay | ’விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகள்’..!! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!!