முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Lok Sabha | திமுகவுடன் கூட்டணி முறிவா..? பரபரப்பை கிளப்பிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை..!!

12:00 PM Feb 28, 2024 IST | 1newsnationuser6
Advertisement

திமுகவுடன் வெற்றிக் கூட்டணி தொடருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் நேற்றைய தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், தேர்தல் பணி ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டம் காரணமாக கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. நிகழ்வை காங்கிரஸ் புறக்கணித்ததாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது. திமுகவுடன் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை ஊகத்தின் அடிப்படையில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

English Summary : Problem in DMK - Congress alliance

Read More : Senthil Balaji | ’செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முகாந்திரம் இல்லை’..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Advertisement
Next Article