Lok Sabha | அதிமுக - தேமுதிக இடையே நாளை ஒப்பந்தம் கையெழுத்து..!! அப்படினா பாமக..?
அதிமுக-தேமுதிக இடையே நாளை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வந்த பாஜகவும், அதிமுகவும் தனித்தனியாக களம் காண்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளை தற்போது தங்களிடம் இழுப்பதற்கு இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பாமக மற்றும் தேமுதிகவுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்ட நிலையில் தேமுதிகவுடன் நேரடி பேச்சுவார்த்தையை அதிமுகவினர் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. இந்நிலையில் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அந்த பேச்சுவார்த்தையின்போது தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் வட மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை தங்களுக்கே வேண்டும் என்று கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளை இரண்டு கட்சிகளுமே கேட்பதால் எந்த கட்சிக்கு ஒதுக்குவது என்று தெரியாமல் அதிமுக தவித்து வருகிறது. இந்நிலையில் தான், அதிமுக - தேமுதிக இடையே தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு நாளை ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More : H.Raja | ”அவர்கள் மதம் மாற்றவே இந்தியாவுக்கு வந்தார்கள்”..!! ஆளுநருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஹெச்.ராஜா..!!