Lok Sabha | பாஜகவுக்கு 18.48%, அதிமுகவுக்கு 17.26% வாக்குகள்..!! தனியார் செய்தி நிறுவனத்தை வெச்சு செய்யும் அதிமுகவினர்..!!
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதியும் என இரு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஏனைய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட அதிமுக மெகா கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறி வருகிறது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனியார் செய்தி நிறுவனம் ஒன்று கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 38.33 சதவீத வாக்குகளும், பாஜக 18.48 சதவீத வாக்குகளும், அதிமுக 17.26 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 7.26 சதவீத வாக்குகளும் பெறும் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்கு சதவீதத்தில் பாஜக 2-வது இடத்தை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட செய்தி நிறுவனத்தை அதிமுகவை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், “அண்ணாமலையை குளிர்விக்க இப்படி ஒரு கருத்து கணிப்பா? என்றும் இது கமலாலயம் வாசலில் நின்று எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு” என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Read More : Strike | இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!! வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு..!!
மேலும் ஒரு பயனர், ”இந்த கருத்துக் கணிப்பை பாஜகவினரே நம்ப மாட்டார்கள்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், “பாஜகவுக்கு 18.48 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றால், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தேர்தலில் சந்தோஷமாக போட்டியிட்டிருப்பார்கள். களத்தில் எதார்த்தம் வேறு என்பதை உணர்ந்ததால் தான் போட்டியிடவில்லை.. கமலாலயம் வாசலிலும் யாருமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
English Summary : AIADMK shocked by poll results