லாக்டவுன் அறிவிப்பா?. கொரோனாவைவிட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் Mpox!.
Mpox: காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) முதன்முதலில் அறிவிக்கப்பட்ட mpox வைரஸ், உகாண்டா மற்றும் கென்யாவில் பரவியது. இது தற்போது கண்டம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பாக்ஸ் வைரஸ் என்னும் குரங்கம்மை சரவதேச அளவில் தற்போது வரை 14 ஆப்ரிக்க நாடுகளில் அதிதீவிரமாக பரவியுள்ள எம். பாக்ஸ் வைரஸ், 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 524 மரணங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2 முறைகள் உலகளவில் எம்.பாக்ஸ் வைரஸ் பரவி இருக்கிறது.
பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு காங்கோவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பரவிய வைரஸ், தற்போது 116 நாடுகளில் தனது தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானம் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உடையோர் ஆகியோரை தாக்கும் குரங்கம்மை (Monkey Pox Mpox), சிறிய அளவிலான கொப்புளங்களுடன் தோன்றும். 21 நாட்கள் வரை மனிதர்களை பாதிக்கும் தன்மை கொண்ட குரங்கம்மை, குணமாகிவிடும் எனினும், உரிய மருத்துவ சிகிச்சை பெறும் பட்சத்தில் உயிரிழப்புகளும் தடுக்கலாம். மத்திய & மேற்கு ஆப்பிரிக்காவில் 1970களில் இருந்து மிகப்பெரிய தொற்றாக கவனிக்கப்படும் எம். பாக்ஸ், அவ்வப்போது சர்வதேச அளவிலும் பரவி வருகிறது.
காய்ச்சல், தசை வலி, தொண்டை புண், அரிப்பு, வலி சொறி, தலைவலி, வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு போன்றவை எம். பாக்சின் அறிகுறியாக கவனிக்கப்படுகிறது. இவ்வாறான புண்கள் உள்ளங்கை, உள்ளங்கால், முகம், வாய், தொண்டை, பிறப்புறுப்பு, ஆசனவாய் ஆகிய இடஙக்ளில் தோன்றும். பாதிக்கப்பட்ட நபரின் உடலில் தோன்றும் திரவம், பின் வெடித்து உடலில் பரவும்.
கொரோனாவுக்கு பிறகு உலகில் பரவும் மிக மோசமாக வைரஸ் பாதிப்பாக இது இருக்கிறது. கொரோனா காலத்தில் உலகெங்கும் லாக்டவுன் போடப்பட்டது, மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டு, சமூக இடைவெளி என்று நாம் பல இன்னல்களை எதிர்கொண்டோம். அதில் இருந்து மீண்டு வருவதே மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. மங்கி பாக்ஸ் கொரோனா போலப் பரவினால் ஆசியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் நிலைமை மோசமாகும். பிறகு மீண்டும் லாக்டவுன் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இருப்பினும், கொரோனா போல மங்கி பாக்ஸ் வேகமாகப் பரவாது. ஏனென்றால் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும். இதன் காரணமாகவே குறுகிய காலத்தில் கொரோனா பலருக்குப் பரவியது. ஆனால், மங்கி பாக்ஸ் அப்படி இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தாலோ அவர்கள் உடலில் இருந்து வெளியாகும் எச்சில் போன்ற திரவங்களை நாம் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பரவும். எனவே, இது கொரோனா அளவுக்கு வேகமாகப் பரவாது. கொரோனாவை விட மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், அது கொரோனா அளவுக்கு வேகமாகப் பரவாது. இதனால் உலகமே கொரோனா சமயத்தில் முடங்கியது போல மொத்தமாக முடங்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.