For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் லாக்டவுன்?… பள்ளிகள், ஹோட்டல், பப்களுக்கு அதிரடி உத்தரவு!... அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, மரணங்கள்!

03:39 PM Dec 21, 2023 IST | 1newsnationuser3
மீண்டும் லாக்டவுன் … பள்ளிகள்  ஹோட்டல்  பப்களுக்கு அதிரடி உத்தரவு     அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு  மரணங்கள்
Advertisement

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அண்டை மாநிலங்கள் அச்சத்தில் உள்ளன.

Advertisement

உலக நாடுகளை மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் பலவற்றில் JN1 ஜே.என்.1 என்கிற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளாவில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டன. கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிவிட்டது. கர்நாடகாவின் பெங்களூர் சாம்ராஜ்பேட் பகுதியில் 64 வயது முதியவர் ஒருவர் கடந்த 15-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கர்நாடகாவில் மொத்தம் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். ஒருநாளைக்கு 5,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். காய்ச்சல், சளி பாதிப்புடன் வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்படும். இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் கொரோனா பரவல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்றார். மேலும் கேரளாவை ஒட்டிய தட்சிண கன்னடா, குடகு, மைசூர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களிலும் பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயற்கை சுவாச கருவி, ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என்று அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறினார்.

ஏற்கனவே கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது பேருந்துகளில் பயணிப்பவர்களும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்களாக விரும்பினால் முக கவசம் அணிந்து கொள்ளலாம் எனவும் கர்நாடகா அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு அறிவுறுத்தல் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. உடல்நலன் பாதிக்கப்படும் மாணவர்களை உடனே தனிமைப்படுத்தி முதல் உதவி சிகிச்சை அளிக்க வேண்டும்; பின்னர் பெற்றோரை வரவழைத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது மாநில அரசு. கர்நாடகாவில் நேற்று முன்தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 22 ஆக இருந்தது. இது நேற்று திடீரென 78 ஆக அதிகரித்தது.

கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் ஹோட்டல்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பப்கள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் நாட்களில் ஹோட்டல்கள், பப்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வருவோரின் காய்ச்சல் அளவும் பரிசோதிக்கப்பட உள்ளதாம்.

Tags :
Advertisement