டிச.12ல் நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாகை மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் ஜாதி, மத பேதமின்றி இங்கு வந்து செல்கிறார்கள். இவ்வாறு சிறப்பு வாய்ந்த தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு 468வது கந்தூரி விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு கொடியேற்றம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 11ம் தேதி இரவு நடைபெறுகிறது. நாகையில் இருந்து புறப்படும் . மறுநாள் அதிகாலை நாகூர் வந்தடையும். பின்னர் நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கொடி ஊர்வலம், கொடியேற்றத்தை முன்னிட்டு எஸ்பி அருண் கபிலன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாநில நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி இடையூறு இல்லாமல்) 12.12.2024 வியாழக்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்திடும் விதமாக எதிர்வரும் 21.12.2024 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்தும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
Read more ; மகாராஷ்டிரா முதலமைச்சராக பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு..!! முடிவுக்கு வந்தது முதல்வர் சஸ்பென்ஸ்..