For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கூகுள் பே செயலியில் ரூ.8 லட்சம் வரை கடன்..!! எப்படி பெறுவது..? எப்படி செலுத்துவது..? வட்டி விவரம் உள்ளே..!!

02:55 PM Jan 16, 2024 IST | 1newsnationuser6
கூகுள் பே செயலியில் ரூ 8 லட்சம் வரை கடன்     எப்படி பெறுவது    எப்படி செலுத்துவது    வட்டி விவரம் உள்ளே
Advertisement

டிஜிட்டல் மயமாகும் உலகில் மக்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றன. இந்த டிஜிட்டல் பேமெண்ட்டில் லோன் வாங்கலாம் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்..? இந்த வசதியை Google Pay வழங்குகிறது. கூகுள் பே மூலமாக நீங்கள் ரூ.8 லட்சம் வரை கடன் பெறலாம். மேலும், மாதாந்திர இஎம்ஐ ரூ.1,000 முதல் தொடங்குகிறது. ஆனால், இங்கு நீங்கள் பெறும் கடன் தொகை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் காலத்தின் அடிப்படையில் கடன் இஎம்ஐ மாறுபடும்.

Advertisement

எப்படி அப்ளை பண்ண வேண்டும்..?

-- கூகுள் பே செயலிக்குள் சென்றவுடன் Offer and Reward என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

-- பின்னர், Manage Your Money என்ற ஆப்ஷன் காண்பிக்கும். அதை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கடன் பெறும் பண மதிப்பு காண்பிக்கப்படும்.

-- ஆவணங்களின்றி ரூ.8 லட்சம் வரை நீங்கள் எளிதாக இதில் கடன் பெறலாம். இதை தொடந்து அங்கே கொடுக்கப்பட்டுள்ள Apply Now என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், புதிய பக்கம் திறக்கப்படும். இதில் நீங்கள் உங்கள் கடன் விவரங்களை தெரிவிக்கலாம்.

-- குறைந்தபட்சம் நீங்கள் ரூ.10,000 முதல் கடன் பெறலாம். உங்கள் தகுதியின் அடிப்படையில் கடன் தொகை தீர்மானிக்கப்படும். கூகுள் பே படி ரூ. 8 லட்சம் வரை கடன் பெறலாம். கடன் 100% டிஜிட்டல். நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்.

-- கடன் காலம் 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை இருக்கலாம். மாதாந்திர இ.எம்.ஐ. ரூ.1000 முதல் தொடங்குகிறது. கடன் வட்டி விகிதம் 13.99 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. Google Pay நேரடியாக கடன் வழங்காது. இது DMI ஃபைனான்ஸ் உடன் இணைந்து கடன் வசதியை வழங்குகிறது.

Tags :
Advertisement