தொழில் தொடங்கும் பெண்கள் ரூ.50,000 வரை கடன்...! மத்திய அரசின் சூப்பர் திட்டம்...!
நாட்டில் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்க பெண் தொழில்முனைவோரின் நிலையான வளர்ச்சிக்கான தேவை இப்போது மிக முக்கியமான ஒன்று. பெண்களின் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக பல நிதியுதவி திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் வங்கிகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அப்படியான இரண்டு சிறப்பு திட்டங்களை இப்பொழுது பார்க்கலாம்.
முத்ரா யோஜனா திட்டம் : அழகு நிலையம், டியூஷன் சென்டர், தையல் பிரிவு போன்ற சிறு நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் பெண்களுக்கும் பொருந்தும். பெண் தொழில்முனைவோர் ரூ. 50,000 முதல் கடன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் வரை பெற முடியும். கடன் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே அவர்கள் பிணை மற்றும் உத்தரவாததாரர்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அன்னபூர்ணா திட்டம்
அன்னபூர்ணா திட்டம், உணவு கேட்டரிங் பிரிவைத் தொடங்கிய அல்லது தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்குப் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ், சமையலறைக்கு தேவையான பொருட்கள், பாத்திரங்கள், எரிவாயு இணைப்புகள், மூலப்பொருட்கள், நீர் வடிகட்டிகள் போன்றவற்றை வாங்குவதற்கு 50,000 ரூபாய் வரை கடன் பெறலாம்.
கடனைப் பாதுகாக்க ஒரு உத்தரவாதம் கொடுக்கும் ஒரு நபர் தேவை. கடனைப் பாதுகாத்த பிறகு, அதை 36 தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். மூன்று ஆண்டுகளில் திரும்பச் செல்லுத வேண்டும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் வட்டி விகிதங்கள் நடைமுறையில் உள்ள சந்தை விகிதங்களின்படி தீர்மானிக்கப்படுகின்றன.