சுய தொழில் தொடங்க ஆர்வமா? மானியத்தோடு 5 கோடி வரை கடன்!! அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கும், ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கும் மத்திய மாநில அரசின் பல்வேறு வகையான திட்டங்களுக்கு கீழ் மானியத்தின் அடிப்படையில் கடன் வழங்கி வருகிறது. முக்கியமாக படிக்காதவர்களுக்கும், அணைத்து பிரிவினருக்கும் மானியத்தோடு கடன் வழங்குவதே இதன் முக்கிய சிறப்பாகும்.
இந்த திட்டத்தில் பயன்பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு, பொது பிரிவினருக்கு அதிக பட்சமாக 45 வயதும் சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்சமாக 55 வயதும் இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு குறைந்த பட்ச வயது 21-ஆக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் வியாபாரம் செய்ய தகுதி இல்லை. சேவை தொழில் உற்பத்தி தொழில் செய்யலாம். இதற்கு ரூ.10 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெறலாம்.
இதில் 25% மானியம் அதாவது ரூ.77 லட்சம் வரை அதிகபட்சமாக மானியம் கிடைக்கும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் 3% பின் முனை வட்டி மானியம் அதாவது 10% வட்டி என்றால் அதில் 3 சதவீதத்தை அரசே தள்ளுபடி செய்யும்.மீதம் 7% வட்டியை மட்டுமே கட்டக்கூடிய வாய்ப்பு உருவாகிறது.
விண்ணப்பிப்பது எப்படி:-
ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான மின் முகவரி இணையத்திலேயே இருக்கிறது. கடன் வாங்க நினைப்பவர்கள் இந்த மையத்திற்கு சென்று அங்குள்ள பொது மேலாளரிடம் ஆலோசனை பெற வேண்டும். முக்கியமாக தொழில் மையங்களிலேயே தேவையான திட்டங்களை விண்ணப்பிக்கவும் முடியும்.
கடன் கட்ட தவறினால் நடவடிக்கை எப்படி இருக்கும்?
பொய் சொல்லி கடன் வாங்கி திரும்ப கட்ட முடியவில்லை என்றால் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையாகவே தொழில் செய்வதற்காக கடன் வாங்கி கட்ட முடியவில்லை என்றால் அதற்கும் அரசு ஒத்துழைத்து கால அவகாசமும் அதற்கான உதவிகளையும் செய்யும்.
Read more ; IndiaAI மிஷன் | 2 லட்சம் வரை பெல்லோஷிப்!! மாணவர்களை பரிந்துரைக்க நிறுவனங்களுக்கு அழைப்பு!!