வாவ்...! ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டியில் கடன்...! தமிழக அரசின் அசத்தலான திட்டம்...! எப்படி பெறுவது...?
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் கைவினை கலைஞர்கள் அவர்களது மூலதன சேவையை பெற்று தொழிலை மேம்படுத்திட குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் அதிகபட்சம் ரூ.10.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல், இருத்தல் வேண்டும். ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனுதவியாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட கடன் திட்டங்களின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் சமணர் ஆகிய சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து பயனடையலாம்.