For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு”..!! என்ன காரணம்..? மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Not only obese people, but also people of normal body weight can get liver damage.
05:10 AM Nov 09, 2024 IST | Chella
”மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு”     என்ன காரணம்    மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Advertisement

மனித உடலின் உள்ளே இருக்கும் இதயம், கணையம், சிறுநீரகம் போன்ற திட உறுப்புகளிலேயே, மிகப்பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல்தான். இவற்றில் மிக அதிகமான வேலைகளைச் செய்வதும் கல்லீரல்தான். ரத்தத்தை சுத்திகரிப்பது, புரதங்கள் மற்றும் செரிமான சக்திக்கான பித்தநீரை உற்பத்தி செய்வது போன்ற 500-க்கும் அதிகமான வேலைகளை செய்வது கல்லீரல் தான். நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் இம்யூனோகுளோஃபுலின் போன்ற புரத உற்பத்தியும் கல்லீரலில்தான் நடக்கிறது.

Advertisement

சர்க்கரை அளவைப் பராமரிப்பது உள்ளிட்ட சிறு உதவிகளையும் கல்லீரல் செய்கிறது. இப்படியான கல்லீரலின் ஆரோக்கியமானது, மிகுந்த ஆபத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில், 10இல் 3 பேருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பதாகவும், மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இந்த பாதிப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமின்றி, சாதாரண உடல் எடையுடன் இருப்பவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். துரித உணவு, மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவையே இதற்கு முக்கிய காரணம். ஆனால் உடற்பயிற்சி, பாரம்பரிய உணவுப் பழக்கம் ஆகியவற்றால், கல்லீரல் பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும்.

கல்லீரல் பாதிப்புகள் குறித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையை, எச்சரிக்கை மணியாக பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கல்லீரலை பாதுகாத்து உயிரைக் காப்பது குறித்து, அரசாங்கமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்ற வலியுறுத்தலையும் மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

Read More : ”நீங்கள் சமைக்கும்போது செய்யும் தவறுகள் கூட நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம்”..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
Advertisement