உலகின் மிக அழகான பெண்கள் பட்டியல்!. டாப் 10ல் இடம்பிடித்தார் தீபிகா படுகோன்!.
Deepika Padukone: உலகின் மிக அழகான பெண்கள்' பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெற்றார்.
பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரும் தீபிகா படுகோனே, தமிழில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தீபிகா அனிமேஷனில் இருந்ததால், அது பெரிதாக எடுபடவில்லை. ஆனால், இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தமிழ் ஆடியன்ஸ் வெகுவாக பார்த்து ரசித்தனர்.
தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் தீபிகா படுகோனே, ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டதை அடுத்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் தீபிகாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஆனது. இதைத்தொடர்ந்து அண்மையில் வெளியா கல்கி திரைப்படமும் வசூலை அள்ளியது.
கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை தீபிகா அறிவித்தார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து, செப்டம்பர் 8ம் தேதி தீபிகாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தநிலையில், தீபிகா படுகோன், தனது சாதனைகளில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது, உலகின் மிக அழகான பெண்கள்' பட்டியலில் 9வதும் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். லண்டன் ஃபேஷியல் பிளாஸ்டிக் சர்ஜரி சென்டர் நடத்திய கோல்டன் ரேஷியோ பகுப்பாய்வின் மூலம் இந்த பாராட்டு கிடைத்துள்ளது.
தீபிகா படுகோனேவுக்குக் கிடைத்த அங்கீகாரம், அவரது உலகளாவிய அந்தஸ்தையும், உலகம் முழுவதும் அவரது பணியால் அவர் விட்டுச் சென்ற அடையாளத்தையும் தீர்மானிக்கிறது. மதிப்புமிக்க பட்டியலில் பிரிட்டிஷ் நடிகை ஜோடி காமர் முதலிடத்திலும், மற்ற ஆறு பெண்களில் ஜென்டேயா, பெல்லா ஹடிட் மற்றும் பியோனஸ் ஆகியோரும் உள்ளனர்.
பியூட்டி ஃபை தரநிலைகளின் கோல்டன் ரேஷியோவின் படி, தீபிகா முக அழகின் அடிப்படையில், 91.22% மதிப்பெண்களை பெற்றுள்ளார். 94.52% மதிப்பெண்களுடன் ஜோடி கமர், 94.37% மதிப்பெண்களுடன் Zendeya, 94.35% மதிப்பெண்களுடன் பெல்லா ஹடிட், 92.44 5 மதிப்பெண்களுடன் பியோனஸ் மற்றும் 91.91% உடன் அரியானா கிராண்டே ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.
கோல்டன் ரேஷியோ என்றால் என்ன? பியூட்டி ஃபையின் கோல்டன் ரேஷியோ ஒரு உன்னதமான கிரேக்க கணக்கீடு மற்றும் அதன் அளவீடுகள் முக விகிதாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. கோல்டன் ரேஷியோ அடிப்படையில் அழகுத் தரங்களை கணக்கீடுகள் மற்றும் அறிவியல் சூத்திரங்களுடன் வரையறுக்க முயற்சிக்கிறது.
Readmore: வாய்வழி உடலுறவில் ஈடுபட்டால் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயம்!. எச்சரிக்கும் நிபுணர்கள்!