முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!! எப்போது தெரியுமா..?

07:58 AM Apr 08, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.17 காலை 10 மணி முதல் ஏப்.19 இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளில் பொதுத்தேர்தல், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு ஏப் 17ஆம் தேதி காலை 10 மணி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19ஆம் தேதி இரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள், இணைக்கப்பட்ட பார்கள் அனைத்தையும் மூட வேண்டும். மேலும், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூட வேண்டும். மேலும், பீர் மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள் மது விற்பனை மற்றும் மாநிலத்தில் மது பாட்டில்களை வாகனத்தில் கொண்டு செல்வது என அனைத்தையும் தடை செய்வதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Read More : ”பாஜகவுக்காக இனி பிரச்சாரம் செய்ய மாட்டேன்”..!! நடிகை குஷ்பூ அதிரடி அறிவிப்பு..!!

Advertisement
Next Article