சிங்கப்பெண்ணே!. ஒருமணி நேரத்தில் 1,500 புஷ்-அப்!. கின்னஸ் சாதனை படைத்த 59 வயது மூதாட்டி!
Guinness record: கனடாவை சேர்ந்தவர் டோனாஜீன் வையில்டின். 59 வயதான இவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார். ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற நிபந்தனைகளுடன் டோனாஜீன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
டோனாஜீன் ஏற்கனவே புஷ்-அப்பில் உலக சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாகவே செய்து தனது சாதனையை அவரே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், `நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன். அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார். டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கூறுகையில், எங்களின் பாட்டி மிகவும் அற்புதமானவர் என்றனர்.
Readmore: இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கின்றன?. யாருக்கு வாய்ப்புகள் அதிகம்?. அறிவியல் உண்மை என்ன?