For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரசாரத்திற்கு கொண்டுவரப்பட்ட சிங்கம், புலி!… நவாஸ் ஷெரிப்பை வரவேற்க தொண்டர்கள் ஏற்பாடு!… வைரலாகும் வீடியோ!

10:20 AM Jan 27, 2024 IST | 1newsnationuser3
பிரசாரத்திற்கு கொண்டுவரப்பட்ட சிங்கம்  புலி … நவாஸ் ஷெரிப்பை வரவேற்க தொண்டர்கள் ஏற்பாடு … வைரலாகும் வீடியோ
Advertisement

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை முன்னிட்டு, நடைபெற்ற பிரசாரத்தில் நவாஸ் ஷெரிப்பை வரவேற்பதற்காக உண்மையான சிங்கம், புலியை தொண்டர்கள் கொண்டுவந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். இந்தநிலையில், பாகிஸ்தானில் பொதுத் தேர்தலை முன்னிட்டு, நடைபெற்ற பிரசாரத்தில் நவாஸ் ஷெரிப்பை வரவேற்பதற்காக உண்மையான சிங்கம், புலியை தொண்டர்கள் கொண்டுவந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். அதன்படி, நவாஸ் ஷெரிப்பீன் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி கடந்த செவ்வாய் கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டது. 130-வது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட நவாஸ் ஷெரிப்பை வரவேற்பதற்காகவும், அக்கட்சியின் சின்னத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் உண்மை சிங்கம் மற்றும் புலியை தொண்டர்கள் கொண்டுவந்திருந்தனர்.

கூண்டில் அடைத்தவாறு கொண்டு வந்திருந்த சிங்கம், புலியை பார்த்து தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்த போதிலும், மறுபக்கம் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்ததால் அவற்றுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். உண்மையான சிங்கம், புலியுடன் பேரணியில் கலந்து கொண்டது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மரியும் அவுரங்ஜப், நவாஸ் ஷெரீப்பின் வலியுறுத்தலின்படி அந்த சிங்கம், புலி திருப்பி கொண்டு செல்லப்பட்டன. பாகிஸ்தானில் உயிருள்ள சிங்கம் மற்றும் மற்ற விலங்கினங்களை பேரணிக்கு கொண்டு வரக்கூடாது என நாவஸ் ஷெரீப் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Tags :
Advertisement