For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மலிவு விலை வீடுகளுக்கான வரையறை ரூ.80 லட்சமாக உயர்வு..? வீட்டு கடன்களுக்கான வட்டியில் 100% விலக்கு..? வெளியாகும் அறிவிப்பு..?

CREDAI has requested the central government to provide 100% waiver on interest on home loans to increase sales of affordable and mid-priced homes.
07:43 AM Nov 28, 2024 IST | Chella
மலிவு விலை வீடுகளுக்கான வரையறை ரூ 80 லட்சமாக உயர்வு    வீட்டு கடன்களுக்கான வட்டியில் 100  விலக்கு    வெளியாகும் அறிவிப்பு
Advertisement

மலிவு விலை மற்றும் நடுத்தர விலை கொண்ட வீடுகள் விற்பனையை அதிகரிக்க, வீட்டுக் கடனுக்கான வட்டியில் 100% விலக்கு அளிக்குமாறு 'கிரெடாய்' மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

’கிரெடாய்’ எனப்படுவது இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். இது, கடந்த 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் 25-வது ஆண்டு நிறுவன தினத்தையொட்டி மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதில், மலிவு விலை வீடுகளுக்கான வரையறை தற்போது ரூ.45 லட்சமாக இருக்கிறது. இதை 75 - 80 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

கடந்த 2017இல் கொண்டு வரப்பட்ட வரையறையின்படி, மலிவு விலை வீடுகளுக்கான வரம்பு ரூ.45 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வரம்பை 75 - 80 லட்சம் ரூபாயாக தற்போது மாற்ற வேண்டும். தற்போது, மலிவு விலை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.45 லட்சம் வரையிலான விலையில் 1 சதவீதமும், ரூ.45 லட்சத்திற்கு மேல் உள்ள வீடுகளுக்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது.

இதை மாற்றி, 75 - 80 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகளுக்கு ஒரு சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். அதேபோல், வருமான வரி சட்டத்தின்படி, சொத்து கடனுக்கான வட்டி மீதான விலக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வட்டியில் 100% விலக்கு அளிக்க வேண்டும் என்றும் 100 சதவீதம் விலக்கும் பட்சத்தில், வீடுகளின் விற்பனை அதிகரிக்கும்” என்றும் கிரெடாய் வலியுறுத்தியுள்ளது.

Read More : அரசு வேலைக்காக மதம் மாறுவதா..? அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!! புதுச்சேரி பெண் வழக்கில் நடந்தது என்ன..?

Tags :
Advertisement