Lifestyle: இதய நோய் ஏற்படாமல் தடுக்க இந்த ஒரு பழம் சாப்பிட்டாலே போதும்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும்.!?
Lifestyle: பொதுவாக முள் சீதா பழத்தின் மரம் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்ந்து வந்தது. ஆனால் தற்போது தைவான், பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு பகுதிகளிலும் வளர்ந்து வருகிறது. இம்மரத்தின் பட்டைகள், வேர்கள், பழங்கள், இலைகள் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாக இருந்து வருவதால் பல பகுதிகளிலும் இந்த மரத்தை வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.
10 மீட்டர் உயரம் வரை வளரும் இம்மரத்தின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பழங்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த நிறத்திலும் காணப்படும். பழத்தின் உள்ளே வெள்ளை நிறத்திலும் பல விதைகளுடனும் இருக்கிறது. ஒரு மரத்தில் 45 கிலோ வரை பழங்கள் ஒரு ஆண்டில் கிடைக்கிறது. மேலும் ஒரு பழத்தின் எடை அரை கிலோ வரை இருந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து பார்க்கலாம்.
1. முள் சீதா பழத்தில், தாதுக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள், கொழுப்பு சத்துக்கள், நீர் சத்து, மாவுச்சத்து, அயோடின், புளோபிட், அஸ்கார்பிக் அமிலம் போன்ற ஊட்டசத்துகள் அதிகமாக இருக்கின்றன.
2. முள் சீதா மரத்தின் காயை அரைத்து சாறாக குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக குணமடையும்.
3. காயில் டானின் என்ற வேதிப்பொருள் நிறைந்திருப்பதால் இது மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.
4. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
5. முள் சீதாப்பழம் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் உடலில் ஏற்படும் நோய் தொற்று கிருமிகளை அழித்து அலர்ஜி பிரச்சனைகளை சரி செய்கிறது.
6. ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைத்து இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை சீர்படுத்துகிறது. இதனால் இதய பாதிப்பு நோயிலிருந்து நம்மை காக்கிறது.
7. இந்த முள் சீதாபழம் அதிகம் பசியை தூண்டி செரிமான மண்டலத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.
8. முள் சீதா மரத்தின் இலைகளை அரைத்து வயிற்றின் மேல் பூசி வந்தால் அஜீரணம், நெஞ்செரிச்சல் குணமாகும்.
9. காயின் சாறை குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். இவ்வாறு பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் வல்லமை இந்த பழத்திற்கு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
English summary
Do you know the medicinal benefits of Mullu Seetha, Soursop fruit? It is a natural healer for cancer.
Read More: சிறுநீரக கற்களை கரைக்கும் முலாம்பழம்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?