உயிருக்கு அச்சறுத்தல்!. இந்த 20 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்! அமெரிக்கா எச்சரிக்கை!
America: உலக நாடுகளிடையே, தீவிரவாதம், அமைதியின்மை, பொருளாதார குழப்பம் உள்ளிட்ட பிரச்னைகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்திவரும் நிலையில் 20 நாடுகளுக்கு மக்கள் பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர், சிரியாவில் உள்நாட்டு குழப்பம் மற்றும் போர் ஆகிய சூழல்கள் உலக நாடுகள் இடையே ஆபத்தான சூழலை உருவாக்கி இருக்கின்றன. வட கொரியாவில் அயல்நாட்டினர் மீதான கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், ரஷ்யா, லெபனான், சிரியா, சோமாலியா, ஏமன், வெனிசுலா, வடகொரியா, உக்ரைன், பெலாரஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா நாடு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கும் காரணங்களால் இந்த நாடுகளில் மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அறிவுறுத்தி இருக்கிறது. பயணங்களை திட்டமிடும் முன்பாக, இணையதளம் மூலம் பயண விவரங்கள், அதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.