முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கவர்ச்சி மட்டுமே வாழ்க்கை கிடையாது..!! வில்லியாக மிரட்டிய சிஐடி சகுந்தலா..!! சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா..?

Legendary actress CIT Shakuntala passed away in Bengaluru due to ill health. You can see in detail about his film journey in this post.
07:53 AM Sep 18, 2024 IST | Chella
Advertisement

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவரது திரைப்பயணம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Advertisement

முதலில் குரூப் டான்சராக திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், அங்கு கிடைத்த அறிமுகம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். கவர்ச்சி நடிகையாக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய இவர், குரூப் டான்ஸர் என்று ஓரங்கட்டப்படாமல் தன் திறமையால் வில்லி நடிகை, குணச்சித்திர நடிகை, ஹிட் ஹீரோயின் என்று பல தசாப்தங்களாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தார்.

இவர், 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமான நிலையில், அப்படத்திற்கு பிறகு சிஐடி சகுந்தலா என்றே அழைக்கப்பட்டார். கவர்ச்சி பாடல்களில் நடனம் ஆடுவது மட்டுமே தனது திரை வாழ்க்கை கிடையாது என்பதில் உறுதியாக இருந்தார். இவர் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்.

இவருக்கு 4 சகோதரர்கள், 2 இரண்டு சகோதரிகள். இவருடைய வருமானத்தில் தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால், சகுந்தலா இரவு பகல் பார்க்காமல் ஓடி ஓடி உழைத்தார். திரையுலகில் அறிமுகமான புதிதில் குரூப் டான்சர்களில் ஒருவராகத்தான் இருந்தார். அதன்பின், சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். சில படங்களில் வில்லியாக வந்து மிரட்டியிருப்பார்.

இந்நிலையில், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் சகுந்தலாவின் களையான முகத்தையும், திறமையையும் பார்த்து தங்கள் தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஜெய்சங்கர் ஜோடியாக சி.ஐ.டி. வேடத்தில் நடித்த அந்த படம் தான் சிஐடி சங்கர். அதன் பிறகு சகுந்தலா, ரசிகர்களின் மனதில் சிஐடி சகுந்தலாவாக சிம்மாசனமிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தார்.

ஜஸ்டிஸ் விஸ்வநாதன், புதிய வாழ்க்கை, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை, சிவாஜியுடன் வசந்த மாளிகை, எம்ஜிஆருடன் இதயவீணை உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 80-களுக்கு பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம், சொந்தம், வாழ்க்கை ஆகிய சீரியல்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான அக்னிசாட்சி உள்பட பல சீரியல்களில் சகுந்தலா நடித்துள்ளார். இன்று அவர் காலமானாலும் ரசிகர்களின் மனதில் என்றென்றும் நினைவுக்கூரப்படுவார்.

Read More : RIP | பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

Tags :
சிஐடி சகுந்தலாசினிமா வாழ்க்கைநடிகை சகுந்தலா
Advertisement
Next Article